EGG 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முட்டைக்கு பெரும் தட்டுப்பாடு!

Share

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாமையால், ஹட்டன் நகரிலுள்ள முட்டை வியாபாரிகள் பலர், முட்டைகளை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் நகரில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சில கடைகளில் முட்​டையொன்று 55 ரூபாய் முதல் 57 ரூபாய் வரைக்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், சில முட்டைக்கடைகளில் முட்டையொன்று 50 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், அவ்வாறான கடைகளில் முட்டை விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எனினும், முட்டையின் மொத்த விலை 52 ரூபாய் முதல் 54 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையினால் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என முட்டை வர்த்தகத்தில் ஈடுபடு​வோர் தெரிவித்தனர்.

முட்டை வர்த்தகத்தை மட்டுமே செய்யாமல், இதர சில்லறை பொருட்களையும் விற்பனைச் செய்யும் வர்த்தகர்கள், ஏனைய பொருட்களை விற்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் முட்டையை விற்பனைச் செய்கின்றனர் என்றும் முட்டை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...