Maithripala Sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் ‘ரகசிய புத்தகம்’

Share

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதுவரை வெளியில் தெரியவராத அரசியல் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்றை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் எழுதியுள்ள புத்தகத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்கள் குறித்து தான் எழுதும் புத்தகத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் சென்றடையாத சில சம்பவங்கள் தான் எழுதும் புத்தகத்தின் மூலம் வெளிவரும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...