image 1033f556c9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னாரில் ஜனாதிபதி

Share

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

அதன் பின்னர், நடுக்குடா கடற்றொழிலாளர் கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கடற்றொழிலாளர் சமூகத்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நடுக்குடா கடற்றொழிலாளர் கிராம மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தப்பட்டதோடு , அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி ,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...

25 68ff21948440b
செய்திகள்இலங்கை

‘எனக்குப் பாதாள உலகத்துடன் தொடர்பில்லை’: காவல்துறை மா அதிபருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை

தனக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு...

25 68ff1b2d7e658
விளையாட்டுசெய்திகள்

இந்திய துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் மருத்துவமனையில் அனுமதி: விலா எலும்புக் காயத்தால் உள் இரத்தப்போக்கு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர்...

25 68ff12db23087
செய்திகள்இலங்கை

மதவாச்சியில் வெடிபொருள் மீட்பு: T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தீவிர விசாரணை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25, 2026) சட்டவிரோதமான...