நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு ஊவா சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் ஆங்காங்கே 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாவாவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment