உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
முன்னதாக, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் புதிய வரிச் சட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பின் 120 மற்றும் 121 ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் மீதான விசாரணையின் போது சட்டமா அதிபர் வழங்கிய உறுதிமொழி காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment