கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தான் உள்ளிட்ட பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
போராட்டத்தில் கலந்து கொண்டபோது, பொலிஸ் அதிகாரிகள் தன்னையும், தன்னுடன் வந்த இரண்டு பெண்களையும் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
போராட்டத்தின் போது ஆணோ பெண்ணோ தற்செயலாக தள்ளப்படுவது அல்லது தற்செயலாக தொடுவது சகஜம், ஆனால் பொலிஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த பொலிஸ் அதிகாரிகளின் எண்கள் மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment