தமிழக மீனவர்கள் கைது! – முதலமைச்சர்.ஸ்டாலின் கடிதம்

202202011943328162 Tamil News MK Stalin Chief Minister Tamil Nadu Union Minister of SECVPF

தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 5ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

குறித்த கடிதத்தில்,

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன.

இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக ரீதியிலான வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத் துறை மந்திரி உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

#SriLanka #India

Exit mobile version