ranil wickremesinghe 759fff
இலங்கைசெய்திகள்

பிரிவினையின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Share

வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் தான் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுபீட்சமான ஒரு நாட்டிற்கு சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன மிகவும் முக்கியமானவை. இனம், மதம், கட்சி, நிறம் என்ற பிரிவினையின்றி, நம்வாழ்விலும், நாட்டிலும் சூழ்ந்திருக்கும் இருளை நீக்க வேண்டும். இதனைக் குறிக்கோளாகக் கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும் என்று இத் தீபத் திருநாளில் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து, இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். தீபத்திருநாளைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...

MediaFile 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் உறைபனி மற்றும் குளு குளு காலநிலை: விடுமுறை தினத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

மலையகத்தின் வசந்தபுரி என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலை...