Medicines
இலங்கைசெய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் மருந்து தட்டுப்பாடு!

Share

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும், இதய நோய்கான அஸ்பிரின் மருந்தை, வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பென்டேஜ், பஞ்சு உள்ளிட்ட பல மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தனியார் மருந்தகங்களில் இருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது – எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...