202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது!

Share

கோப்பாய் பொலிஸ் பிரிவில் உயிர்க்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகதவர்கள் என்பதுடன் வியாபாரிகள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்தனர்.

கோப்பாய் செல்வபுரம் பகுதியில் 4 கிராம் 200 மில்லிக்கிராமுடம் அதே இடத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் ஊரெழு முருகன் கோவிலடியைச் சேர்ந்த நான்கு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 26 வயதுடைய ஒருவரிடம் 2 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின், மற்றொருவரிடம் 96 போதை மாத்திரைகள், ஏனைய இருவரும் 15 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

“சந்தேக நபர்கள் ஐவரும் தினமும் போதைப்பொருள் வியாபாரத்தினால் இலட்சம் ரூபாய் பணம் சம்பாதிப்பவர்கள். அவர் கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினரிடம் டீல் பேசி தம்மை விடுவிக்க முற்பட்டனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஐவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...