இலங்கை
நாட்டில் விரைவில் இளநீருக்கு தட்டுப்பாடு!
வெள்ளை ஈ” எனும் பூச்சியினால் தென்னை மரங்கள் பாதிப்படைவதால், டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னந்தோப்பு தொடர்பாக பரவும் வெள்ளை ஈ பூச்சியின் பாதிப்பு, இளநீர் நிறத்தின் மஞ்சள் நிறத்தில் இந்த பூச்சி ஈர்க்கப்படுவதால் இளநீரை மரத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
இம்முறை பெரும்பாலும் இளநீர் ஏற்றுமதி சந்தையை இலக்காக கொண்டு பயிரிடப்படுகிறது. பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு, 95 லட்சம் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெள்ளை ஈ பாதிப்பு பரவி வருவதால், எதிர்காலத்தில் இளநீர் ஏற்றுமதி சந்தையும் பாதிக்கப்படலாம்.
இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந்தோப்புகள் வெள்ளை ஈ தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் பிரதிப் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். இருப்பினும், வெள்ளை ஈ யைக் கொல்லக்கூடிய பூச்சிக்கொல்லி அல்லது பிற பூச்சிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
வெள்ளை ஈக்கள் மட்டைகளின் அடிப்பாகத்தில் பச்சையத்தை சுரண்டி சாப்பிடும். வெள்ளை ஈ தாக்குதலால் சுரக்கப்படும் இனிப்பு சுவை கொண்ட பசை போன்ற திரவத்தினால் எறும்புகள் ஈா்க்கப்படுகின்றன. இதன் காரணமாக, கறுப்பு நிற பூஞ்சான நோய் ஏற்பட்டு தென்னை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
#srilankanews
You must be logged in to post a comment Login