image 54bc9565d9
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலைகளில் குவியும் குப்பைகளால் கொடிய நோய்கள் பரவும் அபாயம்!!

Share

வைத்தியசாலைகளில் இருந்து தொற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, நாட்டின் சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது.

“தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை முறையாக அகற்றாததால், ஒட்டுண்ணி தொற்று, நுரையீரல் தொற்று, பக்டீரியா மூளைக்காய்ச்சல், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, பூஞ்சை தொற்று மற்றும் பக்டீரியா (இரத்த ஓட்டத்தில் பக்டீரியா) உள்ளிட்ட தேவையற்ற பிரச்சினைகளுக்க முகம் கொடுக்க நேரிடலாம்.”

நோயாளர்களிடமிருந்து தொற்றுக்குள்ளான கழிவுகளை அகற்றும் பணி தனியார் துறை நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ தொற்று கழிவுகளை அகற்றுவதற்கு நூறு ரூபா பணம் போதாது எனவும் சுகாதார நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“இந்தத் தொகை 2017ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது, அப்போது ஒரு லீட்டர் டீசலை 85 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும். மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்புக்கொண்ட விலையை அரசு உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.”

கழிவுகளை அகற்ற தேவையான டீசல் விநியோகம் கிடைக்காததாலும், நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாலும், கடந்த வாரம் பல வைத்தியசாலைகளில் நோய்த்தொற்று கழிவுகள் குவிந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமைக்கு தீர்வு வழங்கப்படாததாலும், கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றாக தனியார் மயமாக்கப்பட்டதாலும், வைத்தியசாலை மட்டத்தில் கழிவுகளை குவிப்பதைத் தவிர வேறு எந்த மாற்று வழியையும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர் மேலும் தெரிவிக்கின்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...