அரசியல்
காக்கையிடம் வேட்புமனு பெற வேண்டிய நிலை!


ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் நெலும் மாவத்தையில் , காக்கையிடம் வேட்புமனுப் பெற வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவிடம் சென்று தமது துயரங்களைத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய ஜனாதிபதியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி, அடகு வைக்கப்பட்டுள்ளது எனவும் சஜித் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் வரை எந்தவொரு உதவியும் வழங்கப் போவதில்லை என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன எனவும் சஜித் குறிப்பிட்டார்.