” இந்த அடக்குமுறை ஆட்சியின் ஆயுள் நீடிக்கப்போவதில்லை. விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலரும். மக்களை சூழ்ந்துள்ள இருள் நீங்கும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அத்தனகல தொகுதிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.
ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை பாதுகாத்து , மக்களின் சுதந்திரத்தை வெற்றியடைக்கூடிய வகையிலான சிறந்த ஆட்சி சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
#SriLankaNews
Leave a comment