இலங்கை
விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா!


எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையின் போது, ஒவ்வொரு விவசாயிக்கும் 50 கிலோ கிராம் யூரியா உர மூடை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனுகொலபெலஸவில், இடம்பெற்ற சிறிய அளவிலான விவசாய வியாபார வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
குறித்த பிரேரணைக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இரண்டரை ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு உர மூடைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.