law
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதியை சேதமாக்கியவருக்கு 3 லட்சத்து 87ஆயிரம் ரூபா தண்டம்!

Share

யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான வீதியை சேதப்படுத்தியவரிடமிருந்து, 3 லட்சத்து 87ஆயிரம் ரூபாவை மாநகர சபை அறவிட்டுள்ளது.

யாழ் நகர் மத்தியை அண்டிய பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் , வீதியின் மறுபக்கம் இருந்த வெள்ள வாய்க்காலுக்குள் வீட்டு கழிவு நீரினை விடுவதற்கு ஏதுவாக வீதியை குறுக்கறுத்து கிடங்கு வெட்டி , பைப் மூலமாக கழிவு நீரை வெள்ள வாய்க்காலுக்குள் விட்டுள்ளார்.

இது தொடர்பில் அறிந்து விசாரணைகளை முன்னெடுத்த மாநகர சபை அதிகாரிகள் , வீதியணை சேதப்படுத்தியமை, வெள்ள நீர் ஓடுவதற்காக கட்டப்பட்ட வாய்க்காலுக்குள் கழிவு நீரினை விட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை குடியிருப்பாளர் மீது சுமத்தினர்.

குடியிருப்பாளர் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டமையை அடுத்து, வீதியை சேதப்படுத்தியமைக்கான நஷ்ட ஈடு மற்றும் தண்டப்பணமாக 3 இலட்சத்து 87ஆயிரம் ரூபாயை மாநகர சபை அறவிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 5
உலகம்செய்திகள்

நுளம்புகள் இல்லாத கடைசி இடமாக கருதப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறை நுளம்பு கண்டுபிடிப்பு!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது....

images 5 2
செய்திகள்இலங்கை

ஏற்றுமதித் துறை ஸ்திரமான வளர்ச்சி: 9 மாதங்களில் $12.98 பில்லியன் வருவாய் – EDB அறிக்கை!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான...

25 68fa28324343d
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி பெக்கோ சமனுக்குச் சொந்தமான ₹8 கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்துகள் பறிமுதல்!

பாதாள உலகக் குற்றவாளியான பெக்கோ சமனுக்குச் சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2...

25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...