IMG 8612
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.செங்குந்தா சந்தை வியாபாரிகள், பலசரக்கு கடைகளில் மரக்கறி விற்க தடை விதிக்க கோரி போராட்டம்

Share

யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்தா சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில்,

சந்தைக்கு வெளியே உள்ள பலசரக்கு கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதனால் , சந்தைக்குள் வந்து மக்கள் மரக்கறியினை கொள்வனவு செய்யாமல் , வீதியோரமாக இருக்கும் பலசரக்கு கடைகளில் மரக்கறியினை கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றனர்.

அதனால் சந்தையின் உள்ளே மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் எம்மிடம் மக்கள் வருவதில்லை. சில கடைகளில் சுகாதாரமின்றி மரக்கறிகளை கொட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

அத்துடன் வீதியோர கடைகளில் மரக்கறி கொள்வனவுக்காக வருவோர் தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்துவதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன.

எமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சந்தைக்கு வெளியே உள்ள கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதனால்
எமது சந்தை சுற்று வட்டாரத்தில் உள்ள யாழ்.மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளுகைக்குள் உள்ள கடைகளில் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரி இரு சபைகளிடமும் மகஜர் கையளித்துள்ளோம்.

அதேவேளை சுகாதாரம் அற்ற முறையில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடுக்குமாறும் , மரக்கறி வாங்க வருவோர் வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதானால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே வீதி ஒழுங்குகளை பேணி , போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு, கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடமும் மகஜர் கையளித்துள்ளோம் என சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...