தேசிய குறைந்தபட்ச மாத சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை உயர்த்த தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.
இதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத சம்பளம் 12500 ரூபாவில் இருந்து 17500 ரூபாவாக ரூபாவினாலும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியாக 500 ரூபாவில் இருந்து 700 ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் கீழ் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 59% ஆக அதிகரித்துள்ளதால் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment