20220806 165659 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது பொதுச்சபை கூட்டம்

Share

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது பொதுச்சபை கூட்டம் இன்றைய தினம் இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் சுந்தரம் அரங்கில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி அக்கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டார்.

கட்சியின் செயலாளராக நா.இரட்ணலிங்கமும்
பொருளாளராக க.சிவநேசனும்
ஊடகப் பிரிவின் தலைவராக பா.கஜதீபனும்
சர்வதேச பேச்சாளராக செ.ஜெகநாதனும் தெரிவாகினர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இயங்குபவர்கள் உட்பட145 பேராளர்கள் வரை கலந்து கொண்டிருந்ததுடன் தீர்மானங்களும் எட்டப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு நாளைய தினம்(07) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

கட்சியின் தேசிய மாநாட்டில் சகோதர கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...