0 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அச்சுவேலியில் இளைஞனிடமிருந்து கிரீஸ் கத்தி, ஓடிக்கொலோன் மீட்பு!

Share

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும் ஓடிக்கோலன் என்பன மீட்கப்பட்டுள்ளன.

ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞன் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பத்தமேனி பகுதியில் வீட்டில் தனியே வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் சென்று வீட்டு வளாகத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வேலை முடிந்து சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீட்டில் இருந்த பெண்மணி தனது இரண்டு பெறுமதியான கைபேசிகள் காணாமல் போயிருந்தமை தொடர்பில் அறிந்து அயலவர்களிடம் அது தொடர்பில் கூறியுள்ளார்.

வீட்டு வேலை செய்து திரும்பிய இளைஞன் மீதே அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருந்தது.

அந்நிலையில் இரவு மீண்டும் அந்த இளைஞன் சாப்பாட்டு பார்சல் ஒன்றுடன் அந்த பெண்மணியின் வீட்டுக்கு வரும் போது அயலவர்கள் மடக்கி பிடித்தனர்.

இளைஞனிடம் விசாரித்த போது , பெண்மணி தனியே வீட்டில் இருப்பதனால் அவருக்கு பாதுகாப்பாக இருக்கவே தான் வந்ததாக கூறியுள்ளார். கைபேசி தொடர்பில் கேட்ட போது , தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

அதனை அடுத்து இளைஞனை ஊரவர்கள் பரிசோதித்த போது அவரது உடைமையில் இருந்து சிறிய ரக கத்தி , ஓடிக்கோலன் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டது.

அதனை அடுத்து ஊரவர்கள் இளைஞனை அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...