0011
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.போதனாவிற்கு 24 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள்

Share

S.K.நாதன் அறக்கட்டளையின் முழுமையான நிதிப்பங்களிப்பில் யாழ். போதனா வைத்தியசாலையினரின் அவசர கோரிக்கையை கருத்திற் கொண்டு 24 மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்கள் திரு.சுப்பிரமணியம் கதிகாமநாதன் அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா மற்றும் வைத்தியர் அன்வர் ஹம்தானி ஆகியோரிடம் உத்தியோக பூர்வமாக அமைச்சின் செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை S.K.நாதனினால் கையளிக்கப்பட்டது.

இவ் நன்கொடை மருந்துகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மிக விரைவில் விநியோகிக்கப்படும் என அமைச்சின் செயலாளரால் கூறப்பட்டுள்ளது

இலங்கையில் தற்காலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மானுடம் மிக்க மருத்துவ சேவையை அதன் தேவை கருதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தற்போதைய யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரிடம் 860,000/= பெறுமதியான மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...