முப்படையினர், பொலிஸாரை சந்தித்து நன்றி தெரிவித்தார் ரணில்

image 3f6eab056e

பாராளுமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரை இன்று நேரில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென தனது வாகனத்திலிருந்து இறங்கி அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார்.

இதன்போது பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்தமைக்காக இராணுவம், பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் ​நேற்றும் (19) இன்றும் (20) பலத்தப் பாதுகாப்புக்கு மத்தியில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version