” ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச பின்வாங்கியமை, பெரும் தியாகமாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
” பொது இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். எனவே, மக்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கையை ஏற்றே, நாட்டுக்காக சஜித் பிரேமதாச இந்த தியாகத்தை செய்துள்ளார்.
டலஸ் வெற்றி பெற்றதும், சஜித் பிரேமதாச பிரதமராவார். இதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment