இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முகமூடி கொள்ளை – யாழில் இருவர் கைது!

Share
robbery gold 1
Share

இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முக மூடி கொள்ளையன் உட்புகுந்து , வீட்டின் கதவை திறந்து விட மேலும் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டார் கொடுத்த முகமூடி கொள்ளையர்களின் அங்க அடையாளங்கள் குறித்த தகவலின் அடிப்படையில் 20 , 21 வயதான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் , மேலதிக விசாரணைகளை அவர்களிடம் முன்னெடுத்து வருவதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...