அரசியல்
அனைவருடனும் ஒத்துழைத்து செயற்படுங்கள்! – அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையில் , இனிவரும் காலங்களில் இலங்கைப் பிரஜைகள் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன், கூடியளவு கவனம் செலுத்துகிறது எனவும் ஜூலி சங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login