இரவோடு இரவாக மாலைத்தீவுக்கு தப்பிச்சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபதாபி நோக்கி பயணிப்பதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச, தற்போது சிங்கப்பூர் ஊடாக அபுதாபி நோக்கி பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாலைதீவு சென்ற கோட்டபாய ராஜபக்சவை அங்கிருந்து உடன் வெளியேற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமயும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment