gota ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியாக ரணில்??

Share

தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கபதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை பதவி விலகவுள்ளார். இது தொடர்பான கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் எனவும், அவரது பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் எனவும், அதுவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசமைப்பின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என்றும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...