Train 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான தொடருந்து சேவை நாளை ஆரம்பம்!

Share

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ்.ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இந்த சேவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

காங்கேசன்துறைக்கும் முறிகண்டிக்கும் இடையே குறுகிய தூர தொடருந்து சேவை நாளை ஆரம்பிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை 6.40 மணியளவில் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இடம்பெறும்.

காங்கேசன்துறை – முறிகண்டி இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு பயணிகள் சேவையில் யாழ்.ராணி தொடருந்து இயக்கப்படும். தினமும் இரண்டு சேவைகள் இடம்பெறும்.

காங்கேசன்துறையிலிருந்து முறிகண்டி நோக்கி காலை 6 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படுவதுடன், கிளிநொச்சியிலிருந்து காங்கேசன்துறை நோக்கி முற்பகல் 10 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படும்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக மூன்றாம் வகுப்புக்குரிய 90 ரூபாவும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாவும் அறவிடப்படும்

இந்த தொடருந்து சேவை முதன்மை நகர ரயில் நிலையஙகளில் சேவையை ஆரம்பிக்கும் நேர அட்டவணை வருமாறு

292965266 717237359774128 952678742544400865 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...