மேல் மாகாணத்தில் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 9 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது.
இது தொடர்பான அறிவிப்பை பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ளது.
நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளில், நேற்றிரவு 9 மணி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படுமவரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தபபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment