Missing
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் காணாமல் போன சிறுமி கிளிநொச்சியில் மீட்பு!

Share

யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி,கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பான நகரப் பகுதிக்கு தனது தேவைக்காக சென்றவேளை கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி குறித்த சிறுமியின் உறவினர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,நாம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் இது பற்றி முறைப்பாடு அளித்த போதும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தற்போது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை தெரிவித்தோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்
– என்றனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6933ef7e16857 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் அழிவடைந்த வாகனங்களுக்கு டிசம்பர் 15 முதல் நடமாடும் சேவை: மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும்,...

high capacity bikes c5c03c9907
இலங்கைசெய்திகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்: 2025 இல் 2,23,423 மோட்டார் சைக்கிள்கள் பதிவு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து...

images 6 3
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி 12 இல் மீண்டும் ஆரம்பம்: ஏனைய வகுப்புகளுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சை இரத்து!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது...

image 83a71cfba5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கம்மடுவவில் நாய்களுக்கு உணவளித்த மாத்தளை நலன் விரும்பிகள்: மனதை உருக்கும் வளர்ப்பு நாய்களின் தேடல்!

‘டிட்வா’ புயலினால் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில் பெரும் சேதத்திற்குள்ளான மாத்தளை மாவட்டத்தின் கம்மடுவ பிரதேசத்தில்,...