arrested 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் பெண்ணைக் கடத்திப் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது!

Share

குடும்பப் பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் பெறுவதற்காகத் தடுத்து வைத்திருந்த நான்கு பேரை வவுனியா – பூவரசங்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் குடும்பப் பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு அவரது மகளுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 5 இலட்சம் ரூபா பணம் தராவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டியுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நேற்று முறைப்பாட்டாளரிடம் கடத்தல்காரர்களுக்குப் பணம் வழங்குமாறு கூறி சந்தேகநபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், கடத்தப்பட்ட பெண்ணும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் 26 மற்றும் 49 வயதுடைய வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...