அமைச்சரவையில் ’21’ குறித்து இன்னமும் முடிவில்லை!

Gota 4

அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான வரைவு நேற்றும் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட போதிலும் அது குறித்துத் தீர்மானிப்பது மீண்டும் அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவையிலும் இவ்விடயம் மேலோட்டமாக ஆராயப்பட்டது.

நாளை இது தொடர்பான சில கருத்துப் பரிமாற்றங்கள் அரசு மட்டத்தில் இடம்பெற இருக்கின்றன என்றும், அதன் பின்னர் அடுத்த திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் பரிசீலிக்கப்படும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என அறியவந்தது.

#SriLankaNews

Exit mobile version