இலங்கை
வாடிகானுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!


புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரில் வீதியோர வாடிகானுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
எனினும், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மதுரங்குளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி பகுதியில் டீசல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுதப்பட்டுள்ள நிலையில் அதனை அண்டிய வடிகானுக்குள் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வடிகானுக்குள் சடலம் ஒன்று கிடப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மதுரங்குளிப் பொலிஸார், விசாரனைகளை ஆரம்பித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர், டீசல் கொள்வனவு செய்ய வந்தவரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை தடத்தினர்.
அத்துடன், நீதிவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தடயவியல் பிரிவினருடன் இணைந்து மதுரங்குளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login