இலங்கை
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை ரூ.210 – வெளிவந்தது வர்த்தமானி
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login