மடு மாதா ஆடிமாத திருவிழா ஜுலை 02 திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் குறூப் நிருபர் மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திரு விழாவுக்கான முன் ஆயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவண.இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ,பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அதிகமான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தரவில்லை. எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆடி திருவிழாவுக்கு சுமார் 02 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்களென எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாகசுகாதாரம்,போக்குவரத்து,குடிநீர்,மின்சாரம்,பாதுகாப்பு தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை மடுத்திருத்தல பகுதிகளில் அதிக எண்ணிக்கையான உணவகங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment