யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 11ஆவது இந்துக்களின் போர் இன்றைய தினம் ஆரம்பித்தது.
இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டு திடலில் இந்த போட்டி சம்பிரதாய நிகழ்வுகளுடன் ஆரம்பித்தது.
போட்டியின் ஆரம்பத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களால், 19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக் குழாமில் இடம்பிடித்துள்ள கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசி கௌரவிக்கப்பட்டார்.
#SriLankaNews
Leave a comment