“அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
“21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்தினோம். அதில் உள்ள சரத்துகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியது யாரென தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சிறு அளவிலான திருத்தங்கள் தேவையில்லை. முழுமையான அரசமைப்பு மறுசீரமைப்பே அவசியம்.” என்வும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
அதேவேளை, தேர்தலை எதிர்கொள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாரெனவும் அவர் அறிவித்தார்.
#SriLankaNews
Leave a comment