அக்கரைப்பற்றில் யானை தாக்கி ஆண் குழந்தை பரிதாப மரணம்!

WhatsApp Image 2022 06 08 at 7.03.36 PM 1

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 6 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதர்சன் சதுர்சன் என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ் குழந்தையை உறங்க வைத்து விட்டு அதன் பெற்றோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு பிரவேசித்த காட்டு யானை ஒன்று குழந்தையைத் தாக்கியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version