கச்சதீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்க கூடாதென
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிககையொன்றை விடுத்தார்
யாழ். மாவட்டத்தில் இன்றைய தினம் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடு பொருளாதார ரீதியாக பின்னடைந்து இருக்கின்ற நிலையில் நாட்டின் பகுதிகளை வேறு நாடுகளுக்கு விற்பனைக்கோ குத்தகைக்கு வழங்குகின்ற செயற்பாடுகளை செய்ய வேண்டாம் – என்றார்.
மேலும், கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணையை பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
#SriLankaNews
Leave a comment