நாளை முதல் எரிபொருள் அட்டைக்கு யாழ். விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய்

Kerosene

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு நாளை முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நடவடிக்கைகளை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அவர்களது பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் முன்னர் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது.

அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நாளை முதல் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் கட்டமாக விவசாயிகளின் தேவை அளவின் 25 சதவீத மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, எரிபொருள் அட்டை இல்லாத விவசாயிகள் நாளை தத்தமது பிரதேச கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பத்து பெற்றுக்கொண்டு நாளைமறுதினமே மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version