இலங்கை
வவுனியா விபத்தில் இளைஞர் மரணம்!


வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
ஓமந்தைப் பகுதியில் இருந்து வந்த பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தகக் கட்டடத் தொகுதி மீதும் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login