இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னாரில் கடற்படை வெறியாட்டம்! – 7 மீனவர்கள் வைத்தியசாலையில்

கடற்படை வெறியாட்டம்
Share

மன்னார் – பேசாலையில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 7 மீனவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேசாலையில் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் கடலுக்குப் புறப்படத் தயரான படகுகளைக் கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏறபட்டது. இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதால் பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதன்பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரி சமரசத்தின அடிப்படையில் தொழிலுக்குச் சென்றனர்.

இவ்வாறு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மாலை 5.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலில ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அவ்விடத்துக்குப் படகில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதோடு படகுகளுடன் தீடைக்குக் கொண்டு செல்ல முற்பட்டனர்.

வேண்டுமானால் எம்மைக் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லுங்கள். எதற்கு யாருமே அற்ற தீடைக்குக் கொண்டு செல்கின்றீர்கள்? என மீனவர்கள் கேள்வி எழுப்பியபோதும் அதற்குச் செவிசாய்க்க மறுத்த கடற்படையினர் மீனவர்களைத் தீடைக்குக் கொண்டு சென்றனர்.

தீடையில் இறக்கிய மீனவர்களை மீண்டும் சோதனை செய்ததோடு உடல் பரிசோதனைகளையும் மேற்கொண்ட சமயம் பேசாலையில் முரண்பாடு ஏற்பட்டபோது பிடிக்கப்பட்ட வீடியோப் படத்தின் மூலம் மீனவர்களை இனங்கண்டு ஆறு மீனவ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்களும் ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விடயம் தொடர்பாக மீனவர் சங்கங்கள், பங்குத் தந்தை ஆகியோர் கடற்படையின் உயர் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் தீர்வு கிட்டவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...