இலங்கை
அனைத்து தனியார் பஸ்களும் இடைநிறுத்தப்படும் நிலை!


டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடியாகத் தகுந்த தீர்வொன்று வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல தனியார் பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்படும் எனத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் பிரச்சினை காரணமாக 3 ஆயிரத்து 500 பஸ்களே நாடளாவிய ரீதியில் தற்போது சேவையில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கான தீர்வை இந்த வாரத்துக்குள்ளேயே எதிர்ப்பார்க்கின்றோம்.
அவ்வாறில்லை எனில், அடுத்த திங்கட்கிழமை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login