மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் ஜனநாயக வழிப் போராட்டக்காரர்களை இலக்குவைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் மேற்கொண்ட வெறியாட்டங்கள் தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின் சந்தேகநபராக இவரது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், உடனடியாகக் கைதுசெய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது.
அதற்கமைய, குறித்த சந்தேகநபர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
#SriLankaNews
Leave a comment