பல்கலை மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

colombo 1 e1652962832517

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் கோட்டையில் உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

‘கோட்டா – ரணில் சூழ்ச்சி அரசை விரட்டியடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் இருந்து காலிமுகத்திடல் நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது.

இவர்கள் மருதானை, புறக்கோட்டை ஊடாக உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் ஊடாக காலிமுகத்திடல் பக்கம் செல்ல முயன்றனர்.

இதன்போது அங்கு வீதித் தடைகளை போட்டிருந்த பொலிஸார், மாணவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தி மாணவர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர்.

எனினும், தொடர்ந்தும் மாணவர்கள் அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version