அரசியல்
வன்முறைச் சம்பவத்தையடுத்து 71 எம்.பிக்களுக்குப் புதிய வீடுகள்!


நாட்டில் அண்மையில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர்களுக்கு விரைவாக புதிய வீடொன்றை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் தனித்து இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக நாடாளுமன்றம் தலையிட்டு அவர்களுக்கு விரைவில் வீடுகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.