இலங்கை
‘குருதியால் தோய்ந்த நம் தேசத்துக்காக ஒரு துளி குருதி’ நிகழ்வு


முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி தமிழர் தாயகத்தில் நாளை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் தயார்ப்படுத்தலில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்ததான நிகழ்வு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
‘குருதியால் தோய்ந்த நம் தேசத்துக்காக ஒரு துளி குருதி’ என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் அனைவரும் கலந்துகொண்டு இறுதிப் போரில் உயிர்நீத்த எமது உறவுகளின் நினைவாக இரத்ததானம் செய்யுமாறு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.