Mano
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் அரசை வீழ்த்த உதவமாட்டோம்! – மனோ தெரிவிப்பு

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது. ஆனால், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம்.

பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம்.

தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம்.

ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதை பிரதமர் செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டணியின் முடிவை அறிவித்தார்.

இது தொடர்பில் கூட்டணி சார்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

ரணில் விக்கிரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை. சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. எரிநெய் இல்லை. உரம் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றுக்கு குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும். அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம். ஆகவே இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணைப்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளை பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளை பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது. இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டு குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்த பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புரீதியாக, குறைந்தபட்சம், 20ஐ வாபஸ் வாங்கி, மீண்டும் 19ஐ கொண்டு வர வேண்டும். நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை. இதை பிரதமர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறோம்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69360fc20e3c2
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை மீட்பு நடவடிக்கைகளுக்காக CERF நிதியிலிருந்து ஐ.நா. 4.5 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது!

‘டிட்வா’ புயல் மற்றும் அதனைத் தொடர்ந்த அனர்த்தங்களால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை...

1500x900 44536696 indosiya33
உலகம்செய்திகள்

இந்தோனேசியா: ஜகார்த்தா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து – 17 பேர் பலி!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடம் ஒன்றில் திங்கட்கிழமை (டிசம்பர் 9)...

image 405bd3350f
இலங்கைசெய்திகள்

இளநீர் வெட்டும் கத்தியால் 5 முறை குத்திக் கொலை: கணினிப் பொறியியலாளர் கைது!

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்திக் கொலை செய்த...

image 8b04a559b8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மன்னார் மாவட்ட பறங்கி ஆறு, பாலி ஆறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

வடகிழக்குப் பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால், பேராறு குளத்தின் பாதுகாப்பு...