ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நிலவும் யாழ். வேலணை பிரதேச சபையில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்குச் சென்றிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் இந்தச் செயற்பாடு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பின்னர் ஆளும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்தனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 Comment