தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டது.
அதற்கமைய, புதிதாக 17 அமைச்சர்களும், 24 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், இன்று மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள்:-
* நெசவுக் கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.எம். முஷாரப் நியமனம்
* கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமனம்
* இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்
#SriLankaNews
Leave a comment